திருநங்கையிடம் பதக்கத்தை இழந்துவிட்டேன் என்று இந்தியாவின் ஹெப்டத்லான் தடகள வீராங்கனை ஸ்வப்னா பர்மான் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் நாளில் இருந்து இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது.
அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், 800மீ ஓட்டப்பந்தயத்தில் பெண்களுக்கான பிரிவில் இந்திய வீராங்கனை நந்தினி அகசாரா 5712 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.அவரை விட 4 புள்ளிகள் குறைவாக சேர்த்த மற்றொரு இந்திய வீராங்கனையான ஸ்வப்னா பர்மான் 4-வது இடத்தைப் பிடித்தார்.
மேலும் சீனாவின் ஜெங் நினாலி 6149 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், உஸ்பெகிஸ்தானின் எகடெரினா வோரோனினா 6056 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.
இந்நிலையில், ஸ்வப்னா பர்மான் நேற்று தனது ட்விட்டர் பதிவில், “திருநங்கையிடம் நான், வெண்கல பதக்கத்தை இழந்துவிட்டேன். தடகள விதிகளுக்கு இது எதிரானது. எனவே எனது பதக்கத்தை பெற்று கொடுங்கள்” என தெரிவித்திருந்தார். சிறிது நேரத்தில் இந்த பதிவை அவர், நீக்கினார். தற்போது இந்த விவகாரம் தடகள உலகில் விவாத பொருளாக மாறி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
+ There are no comments
Add yours