தொடரை வென்று கெத்து காட்டிய இந்தியா!!

Spread the love

விருவிருப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ள இந்திய அணி தொடரையும் கெத்தாக கைப்பற்றியுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது .

தொடர் ஆட்டத்தால் இந்திய அணியின் மூத்த வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதால் கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியை அபாரமாக வென்ற இந்திய அணி நேற்று இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது .

இப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட்டும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் 8 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், 2-வது விக்கெட்டுக்கு சிறப்பான கூட்டணி அமைத்த சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியான ஆத்தி வெளிப்படுத்தினர் .

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த ஸ்ரேயஸ் மற்றும் சுப்மன் சத்தம் விளாசி அசத்தினர். அவர்களை தொடர்ந்து களமிறனிய கேப்டன் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆரம்பம் முதல் அதிரடியில் எதிரணியை மிரளவைத்தனர் .

சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 38 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க தொடர் தாக்குதலில் ஈடுபட்ட சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 72 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அப்போது மழை குறிக்கிட்டதால் ஆஸ்திரேலிய அணியின் இலக்கு 33 ஓவர்களுக்கு 317 ரன்களாக குறைக்கப்பட்டது.

இருப்பினும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஆஸ்திரேலிய அணி 28.2 ஓவர்களில் 217 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு0 என்ற கணக்கில் இந்திய அணி கெத்தாக கைப்பற்றியுள்ளது .

இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஆறுதல் வெற்றி பெறுமா அல்லது வாஷ் அவுட் ஆகி நாடு திரும்புமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம் .


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours