தடகளப் பிரிவில் ஜொலிக்கும் இந்திய வீரர்கள்..!

Spread the love

சீனாவில் நடைபெற்று வரும் 19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர் வீராங்கனைகள் பதக்கங்கள் பல வென்று ஜொலிக்கின்றனர்.

பல்வேறு பிரிவுகளில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள வீரர் வீராங்கனைகள் தங்களது திறமைகளை உலகிற்கு காட்டும் வகையில் பல பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர் .

அந்தவகையில் ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி தங்கம் வென்று அசத்தியுள்ளார் . 62.92 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து அசத்தியுள்ள அன்னு ராணி தங்கப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார் .

ஆசிய விளையாட்டு போட்டியின் 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை பாருல் செளத்ரி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் இதற்கு முன் நேற்று நடைபெற்ற 3,000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் பாருல் சௌத்ரி .

ஆசிய விளையாட்டு தொடரின் 800 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற இந்திய வீரர் முகமது அஃப்சல் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் . 1 நிமிடம் 48.43 விநாடிகளில் இலக்கை எட்டிய அஃப்சல் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டு வீராங்கனை வித்யா ராம்ராஜ் வெண்கலம் வென்று நாட்டிற்கும் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டியின் ஆண்கள் மும்முனை தாண்டுதலில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் வெண்கலம் வென்று நாட்டிற்கும் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மும்முனை தாண்டுதலில் 16.68 மீட்டர் தூரம் தாண்டி அசத்திய பிரவீன் சித்ரவேல் வெண்கலப் பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours