கடந்த சில மாதங்களாகவே கர்நாடகா அரசு உச்ச நீதிமன்ற உத்தரவுபடி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய உரிய அளவு தண்ணீரை தராமல் இருந்து வருகிறது. இதனால் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசு, காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றில் முறையிட்டு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பிக்கள் அடங்கிய குழு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்திவுள்ளனர்.
இதனை தொடர்ந்து, காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் இன்று டெல்லி செல்கின்றனர். டெல்லியில் அனைத்து கட்சி எம்பிக்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். மேலும், காவிரி விவகாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஆகியோரை சந்திக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours