நாட்டின் மற்றொரு அச்சுறுத்தலான இடதுசாரி தீவிரவாதம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முழுமையாக அழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நக்ஸல் தீவிரவாதம் அதிகம் உள்ள மகாராஷ்டிரம், ஆந்திரம், ஜார்க்கண்ட், ஒடிஸா, பிகார், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களின் முதல்வா்களுடனும், மாநிலங்களின் அமைச்சா்களுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நேற்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த நான்கு தசாப்தங்களைவிட 2022-ஆம் ஆண்டில் நக்ஸல் தீவிரவாத தாக்குதல்கள் மிகவும் குறைவாகவே நிகழ்ந்துள்ளன. நக்ஸல் தீவிரவாதம் மனிதநேயத்தை அழிக்கும் சாபமாகும். அதன் அனைத்து வடிவங்களையும் நாம் வேரோடு அழிக்க வேண்டும். அதேபோல் நாட்டின் மற்றொரு அச்சுறுத்தலான இடதுசாரி தீவிரவாதம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முழுமையாக அழிக்கப்படும் என்றார் அவா்.
+ There are no comments
Add yours