உலகப் பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். இந்தியா வந்துள்ள இவர் இன்று (மார்ச் 29) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து சில மணி நேரம் இருவரும் கலந்துரையாற்றினார்.
இந்த சந்திப்பில் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், பருவ கால மாற்றம், பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்டவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. தொடர்ந்து, பிரதமர் மோடி, பில் கேட்ஸுக்கு நினைவு பரிசு வழங்கினார்.
அப்போது தமிழ்நாட்டில் தூத்துக்குடி கடல் பகுதியில் கிடைக்கும் முத்து, களிமண்ணால் செய்யப்பட்ட தமிழ்நாட்டு குதிரை பொம்மைகள், டார்ஜீலிங், நீலகிரியில் உருவான டீத்தூள் உள்ளிட்டவைகளை பில் கேட்ஸுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
+ There are no comments
Add yours