பொதுவாக நாம் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது முக்கிய தேவையாக இருக்கும் ஏடிஎம் கார்டை நாம் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதனை வைத்து ஏடிஎமில் எளிதாக பணம் எடுத்துக் கொள்ளும் வசதி செயல்பாட்டில் உள்ளது. இதுபோக பெரும்பாலான வங்கிகளில் அந்தந்த வங்கிகளின் மொபைல் செயலிகளை வைத்து ஏடிஎம் இல்லாமல் அந்த செயலிகள் மூலமாக ஏடிஎம்-ஐ உபயோகித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
தற்போது இதனை மேலும் எளிதாக்கும் வகையில் யுபிஐ எனப்படும் ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் எளிதாக பணம் பெற்றுக் கொள்ளும் வசதியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக ஹிட்டாச்சி நிறுவனம் அதன் ‘ஹிட்டாச்சி பேமெண்ட் சர்வீஸ்’ மூலம் இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகத்துடன் (NPCI) இணைந்து நாடு முழுவதும் சுமார் 3,000க்கும் அதிகமான இடங்களில் யுபிஐ மூலம் ஏடிஎம் கார்டு இல்லாமல் எளிதாக பணத்தை பெற்றுக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த யுபிஐ ஏடிஎம்-ஐ உபயோகிக்க எந்தவித வங்கி ஏடிஎம் கார்டும் தேவை இல்லை. ஏதேனும் ஒரு யுபிஐ அக்கவுண்ட் அதாவது கூகுள் பே (Google Pay), போன் பே (Phone Pe), அமேசான் பே (Amazon Pay) போன்ற யுபிஐ பேமென்ட் அப்ளிகேஷன் இருந்தால் போதும் இதனை வைத்து எளிதாக பணம் எடுத்துக் கொள்ளலாம்.
இதன் மூலம் ஏடிஎம் கார்டை வைத்து நடைபெறும் சில ஸ்கிம்மிங் மோசடியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அதாவது ஒரு சில ஏடிஎம் களில் ஏடிஎம் மிஷினில் நவீன கருவியை பயன்படுத்தி அதன் மூலம் ஏடிஎம் கார்டில் உள்ள பயனாளர்களின் வங்கி ரகசியங்களை தெரிந்துகொண்டு பின்னர் ஏடிஎம் மோசடிவாதிகள் சில சட்ட விரோத சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க தற்போது இந்த யுபிஐ ஏடிஎம் வசதி பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதேபோல் பேங்க் ஆப் பரோடா வாங்கியும் நாடு முழுவதும் இருக்கும் தங்களது 6000 ஏடிஎம் மிஷின்களில் யுபிஐ மூலம் பணம் பெறும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours