நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானார்!

Spread the love

இந்திய பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் காலமானார் என்று நேற்று பொருளாதார துறைக்கான நோபல் பரிசு பெற்ற கிளாடியா கோல்டின் உறுதி செய்துள்ளார். 89 வயதாகும் அமர்த்தியா சென் உடல் நலக்குறைவால் காலமானதாக கூறப்படுகிறது.

கிளாடியா கோல்டின் தனது X தள பக்கத்தில், “எனது அன்பான பேராசிரியர் அமர்த்தியா சென் சில நிமிடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார், வார்த்தைகள் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் 2023-24ம் ஆண்டு பொருளாதார துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டது.

அமர்த்தியா சென்

கடந்த 1933ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்திநிகேதனில் பிறந்த அமர்த்தியா சென், பொருளாதாரத்திற்கான பங்களிப்பிற்காக 1998 இல் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசைப் பெற்று கொண்டார். மேலும் 1999 -ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதும் அமர்த்தியா சென்னுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours