புதுடெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான காலாண்டு பொருளாதார வளர்ச்சி குறித்து பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இது வரப்போகும் விஷயங்களுக்கான ட்ரெய்லர் மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.
2023-24ம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதம் வளர்ச்சி அடைத்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் நடப்பு நிதியாண்டுக்கான மொத்த பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக உள்ளது.
நான்காவது காலாண்டு வளர்ச்சி 6.9 சதவீதமாகவும், மொத்த ஆண்டுக்கான வளர்ச்சி 7.6 சதவீதமாகவும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “2023-24ஆம் ஆண்டுக்கான நான்காவது காலாண்டு ஜிடிபி வளர்ச்சி தரவுகள், நமது பொருளாதாரத்தின் வலுவான வேகத்தை காட்டுகிறது. இது மேலும் வேகமடைய காத்திருக்கிறது.
நம் நாட்டின் கடினமாக உழைக்கும் மக்களின் உதவியால், 2023-24ஆம் ஆண்டுக்கான 8.2 சதவீத வளர்ச்சி, உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து உள்ளது என்பதை காட்டுகிறது. நான் ஏற்கெனவே சொன்னது போல், இது வரவிருக்கும் விஷயங்களுக்கான ட்ரெய்லர் மட்டுமே” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours