சத்தீஸ்கரில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ரயிலில் பயணம் செய்து பயணிகளிடம் கலந்துரையாடினார்.
சத்தீஸ்கரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டார்.
அப்போது பிலாஸ்பூர் முதல் ராய்ப்பூர் வரை ரயிலில் பயணம் செய்து பயணிகளுடன் கலந்துரையாடினார்.
கடந்த சில மாதங்களாகவே பல்வேறு தரப்பு பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடி வருகிறார். சமீபத்தில் விவசாயிகளுடனும்,பைக் மெக்கானிக்குகளுடனும்
ரயில்வே சுமைதூக்கும் தொழிலாளர்களுடனும் இணைந்து பணியாற்றி அவர்களிடம் ராகுல் காந்தி கலந்துரையாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.
இதுகுறித்து சத்தீஸ்கர் துணை முதலமைச்சர் டி. எஸ். சிங் டியோ கூறுகையில், “அவர் (ராகுல்) சாலை அல்லது ஹெலிகாப்டர் மூலம் திரும்புவார் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நாங்கள் உணவு உண்ணும்போது திடீரென்று காரில் உட்காருங்கள் நாங்கள் ரயிலில் செல்வோம் என்றார்.
+ There are no comments
Add yours