சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் சிறைத்துறை அதிகாரிகளிலும் அனுமதி கேட்டு மனு அளித்து உள்ளார். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆந்திரா சென்று ஜெயிலில் உள்ள சந்திரபாபு நாயுடுவை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 2014 முதல் 2019 வரை ஆந்திர முதல்வராக இந்தார். அவரது பதவிக் காலத்தில் மாநில திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை மாநில சிஐடி போலீஸார் கடந்த 9ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இது அம்மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த நடிகர் ரஜினி காந்த் சந்திரபாபு நாயுடுவின், மகன் லோகேஷுக்கு போன் செய்து நலம் விசாரித்தார். இதற்கு ரோஜா கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரஜினிகாந்த் சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவை சந்திக்க சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தார். அதற்கான அனுமதி வழங்கப்பட்டால், அவர் இன்று சந்திரபாபு நாயுடுவை சந்திப்பார் என தெரிகிறது. இந்த நிகழ்வு ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
+ There are no comments
Add yours