எஸ்பிஐ செயல்பாட்டுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் !

Spread the love

தேர்தல் பத்திர விவகாரத்தில் எஸ்பிஐ செயல்பாட்டுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.. தேர்தல் பத்திர எண்களை ஏன் வழங்கவில்லை என உச்சநீதிமன்றம் சராமரியாக கேள்வி எழுப்பி உள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து விபரங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் திட்டத்தை தேர்தல் பத்திரம் திட்டத்தை 2018-ம் ஆண்டில் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது.

இதன்படி, பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ரூ.1,000-ல் தொடங்கி, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி என தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட சில கிளைகளில் மட்டும் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த பத்திரங்களை தனிநபர், நிறுவனம் என யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்றும், தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம் என்றும் இந்த பத்திரங்களில் வாங்குபவர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டது.

தாமரையில் நிற்க நெருக்கடி.. போட்டியிடவே வேண்டாம்.. பின்வாங்கும் ஓ பன்னீர்செல்வம்? என்ன நடக்குது? அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் திட்டத்தை தேர்தல் பத்திரம் திட்டத்தை 2018-ம் ஆண்டில் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இதன்படி, பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ரூ.1,000-ல் தொடங்கி, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி என தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட சில கிளைகளில் மட்டும் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த பத்திரங்களை தனிநபர், நிறுவனம் என யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்றும், தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம் என்றும் இந்த பத்திரங்களில் வாங்குபவர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே தேர்தல் பத்திரம் திட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே, அந்த சட்டம் அறிவிக்கப்பட்ட 2017ம் ஆண்டே, அதனை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு (ஏடிஆர்), காமன் காஸ் ஆகிய தொண்டு நிறுவனங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2017-ல் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், காங்கிரஸ் மூத்ததலைவர் ஜெயா தாக்குர் சார்பிலும் கடந்த 2017-ல் வழக்கு தொடரப்பட்டது. இந்த பல்வேறு வழக்குகுள் ஒருங்கிணைக்கப்பட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கை கடந்த 2 ஆண்டுகளாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, பி.ஆர்.கவாய் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் ஆஜரான மனுதாரரகள், தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் மோசடி நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துகட்சிகளுக்கு நன்கொடை அளித்து, தேவையான பலன்களை அடையும் என்றும் குற்றம்சாட்டினார்கள். சென்சிட்டிவ்வான மேட்டர்.. போக்சோவில் கைதாகும் எடியூரப்பா? என்ன நடந்தது? உள்துறை அமைச்சர் விளக்கம் இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, ஆளும்கட்சிக்கு தாங்கள் அளிக்கும் நன்கொடை, எதிர்க்கட்சிக்கு தெரிய கூடாது என்று பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் நினைக்கின்றன. ஒருவேளை எதிர்க்கட்சி ஆட்சியை கைப்பற்றினால் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வர்த்தக நிறுவனங்கள் அஞ்சப்படுகினற்ன. இதனாலேயே, நன்கொடையாளரின் அடையாளம் தெரியாத வகையில் தேர்தல் பத்திரம் திட்டம் அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்கள் கடந்த 2023 ஆண்ட நவம்பரில் நிறைவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு பிப்ரவரி 15ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பில், மக்கள் உரிமை சட்டம், தகவல் பெறும் உரிமை சட்டம், வருமான வரிசட்டம் ஆகியவற்றுக்கு எதிராக தேர்தல் பத்திரம் திட்டம் இருக்கிறது. கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறுவதை ஏற்க இயலாது. எனவே இந்த தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. தேர்தல் பத்திரம் விற்பனையை பாரத ஸ்டேட் வங்கி உடனே நிறுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் மாற்றாமல் வைத்துள்ள பத்திரங்களை உடனே திரும்ப ஒப்படைக்க வேண்டும். இனி அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக நன்கொடை கொடுப்பவர்கள் வழங்க வேண்டும்.. கடந்த 2019 ஏப்ரல் முதல் இதுவரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த முழுமையான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி வரும் மார்ச் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 13ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இன்று வெளியாகும் லோக்சபா தேர்தல் தேதி? நடத்தை விதிகள் உடனே அமல்.. தயாராகும் இந்திய தேர்தல் ஆணையம் ஆனால் இந்த விவரங்களை வழங்குவதற்கு ஜூன் 30-ந் தேதி வரை கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி கடந்த மாரச் 6-ந் தேதி மனு தாக்கல் செய்தது.

இதை கடந்த 11-ந்தேதி விசாரித்த நீதிபதிகள் கூடுதல் அவகாசம் வழங்க மறுத்து விட்டனர். அத்துடன் ஏற்கனவே உத்தரவிட்டபடி, தேர்தல் பத்திர விவரங்களை மறுநாளே அதாவது மார்ச் 12-ந் தேதி மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டனர். அதன்படி மறுநாள் மாலையில் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி வழங்கியது. அதில் கடந்த 2019 ஏப்ரல் முதல் கடந்த பிப்ரவரி 15-ந்தேதி வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளதாகவும், இதில் 22,030 பத்திரங்களை அரசியல் கட்சிகள் பணமாக்கி இருப்பதாகவும் எஸ்பிஐ கூறியிருந்ததுது. இதனிடையே இந்த விவரங்களை 15-ந்தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் நேற்று மாலையில் வெளியிட்டது.

‘பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்த தேர்தல் பத்திரங்களின் வெளிப்பாடு’ என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த தகவல்கள் 2 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பட்டியல் விவரங்களை பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பட்டியலில் பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டல் சர்வீசஸ் என்ற நிறுவனம் அதிகபட்சமாக 1,368 கோடி ரூபாய் தேர்தல பத்திரம் மூலம் நன்கொடை வழங்கி உள்ளது. இது கோவையைச் சேர்ந்த லாட்டரி நிறுவனம் ஆகும். கடந்த 2022-ம் ஆண்டு அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆளான இந்த நிறுவனம் ரூ.1,368 கோடிக்கு 2 நிறுவனங்களின் கீழ் தேர்தல் பத்திரங்களை வாங்கி இருக்கிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனம் ரூ.398 கோடி, ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டலின் 3 நிறுவனங்கள் சேர்த்து ரூ.246 கோடி மதிப்பிலான பத்திரங்கள் வாங்கி உள்ளன. அரசின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டப்பணிகளை பெற்றுள்ள மேகா என்ஜினீயரிங் நிறுவனம் ரூ.966 கோடி நன்கொடை வழங்கி உள்ளது குவிக் சப்ளை செயின் லிட் நிறுவனம் ரூ.410 கோடி, ஹால்டியா எனர்ஜி ரூ.377 கோடிக்கு பத்திரங்கள் வாங்கியுள்ளன.

இந்த பட்டியலை பார்த்த எதிர்க்கட்சிகள் அவர்கள் வழங்கிய தேர்தல் பத்திரங்கள் மற்றும் அப்போது நடந்த அமலாக்கத்துறை ரெய்டு ஆகியவற்றை தொடர்புபடுத்திய குற்றம்சாட்டி வருகின்றன. லோக்சபா தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்கிற நிலையில், தேர்தல் பத்திரங்கள் வெளியானது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து சரமாரியாக கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இதனிடையே தேதி வாரியாக எந்தெந்த நிறுவனங்கள் தனிநபர்கள் பத்திரங்களை வாங்கினார்கள் எந்தெந்த தேதியில் பத்திரங்களை வங்கியில் கொடுத்து அரசியல் கட்சிகள் ரொக்கமாக மாற்றினார்கள் என்ற விவரங்கள் மட்டுமே நேற்று பட்டியலில் இடம் பெற்றுள்ளது மற்றபடி தேர்தல் பத்திர எண், யார் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகை நன்கொடையாக வழங்கினார்கள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

உச்ச நீதிமன்றம் கண்டனம்:

இதுஒருபுறம் எனில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்றது. தலைமை நீதிபதி அடங்கிய ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் மீண்டும் விசாரித்தது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் திடீரென வழக்கின் விசாரணை இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் பத்திர விவகாரத்தில் எஸ்பிஐ செயல்பாட்டுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. தேர்தல் பத்திர எண்களை ஏன் வழங்கவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திர எண்களை வழங்க எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து விபரங்களை வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட நிலையில், தேர்தல் பத்திரத்தின் எண்கள் இல்லாததால் யார் யார் எந்த கட்சிக்கு நன்கொடை வழங்கினர் என்பது தெரியவில்லை. அந்த விவரங்களையும் உச்ச நீதிமன்றம் வெளியிட வேண்டும் என்று தெரிவித்திருப்பதால், இப்போது அனைத்து விவரங்களும் வெளிவரப்போகுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours