ஜம்மு-காஷ்மீரில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் கைது..!

Spread the love

ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவி வரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதிகளை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்து வரும் சூழலில், குல்காம் மாவட்டத்தில் பதுங்கி இருந்த 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை இணைந்து நடத்திய அதிரடி வேட்டையில், ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இந்த பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. பின்னர், அந்த 5 பயங்கரவாதிகளையும் சுற்றிவளைத்து கைது செய்துள்ளது.

அவர்களிடம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், மூன்று கைக்குண்டுகள், ஒரு யுபிஜிஎல், இரண்டு கைத்துப்பாக்கி மேஜின்கள், 12 பாய்ஸ்டல் ரவுண்டுகள் மற்றும் 21 ஏகே-47 ரவுண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதூய.

ராணுவத்தினர் வெளியிட்ட தகவலின்படி, 5 பயங்கரவாதிகள் யாரென அடையாளம் காணப்பட்டு இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் நாக வேலை திட்டம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours