ரூ2000 நோட்டுக்களை மாற்ற செப்டம்பர் 30ம்தேதியே கடைசி என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி அக்டோபர் 7ம் தேதி இன்று சனிக்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது .
2016ல் ரூ500, ரூ1000 நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதை அடுத்து புதிய 2000 நோட்டுகள் கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் 2000 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் பெரிதாக இல்லாமலே இருந்தது.
இந்த நிலையில் ரூ2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக கடந்த மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும் செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றினர்.
இதுவரை புழக்கத்தில் இருந்த ரூ 3.42 லட்சம் கோடி நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், அதாவது 96 சதவீதம் ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு விட்டதாகவும், ரூ.14000 மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் இதுவரை வங்கிகளுக்கு வரவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ எதிர்பார்த்த அளவிற்கு 2000 ரூபாய் தாள்கள் வராத நிலையில் கால அவகாசத்தை மேலும் 7 நாட்களுக்கு உயர்த்தியது. முதலில் செப்டம்பர் 30, 2023க்கு பிறகு ரூ2000 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் 7 நாட்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த காலக்கெடு அக்டோபர் 7ம் தேதி சனிக்கிழமை இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours