தற்காலிக துணை சபாநாயகர் பொறுப்பை புறக்கணிக்கும் “இந்தியா” கூட்டணி.

Spread the love

புதுடெல்லி: தற்காலிக துணை சபாநாயகர் பொறுப்பை “இந்தியா” கூட்டணி புறக்கணிக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களையும், தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களையும் பெற்றதால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. 234 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சிகளாக மக்களவையில் இந்தியா கூட்டணி அமருகிறது. இந்த சூழலில் 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், மக்களவையின் இடைக்கால சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ள பர்த்ருஹரி மகதாப்க்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். பின்னர் நாடாளுமன்ற வளாகத்திற்கு செல்லும் பர்த்ருஹரி மகதாப், காலை 11 மணிக்கு மக்களவையை கூட்ட உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தற்காலிக துணை சபாநாயகர் பொறுப்பை “இந்தியா” கூட்டணி புறக்கணிக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. முகவின் டிஆர்பாலு, காங்கிரஸ் கொடிக்குன்னில் மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் சுதிப் பந்தோபாத்யாய் ஆகியோர் தற்காலிக துணை சபாநாயகர் ஆவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால்
8 முறை எம்பி கொடிக்குன்னில் சுரேஷை தற்காலிக சபாநாயகராக நியமிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்காலிக துணை சபாநாயகர் பொறுப்பை “இந்தியா” கூட்டணி புறக்கணிக்கலாம் என்று தெரிகிறது.

மேலும் அரசியல் சாசன புத்தகத்துடன் “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றம் நோக்கி எம்பிக்கள் இன்று பேரணி நடத்தவுள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours