லே: லடாக்கில் பயிற்சியின் ஒரு பகுதியாக ஆற்றைக் கடக்கும்போது 5 ராணுவ வீரர்கள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லடாக் தலைநகர் லே-வில் இருந்து 148 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதி நியோமோ-சுஷுல். இங்குள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு(எல்ஏசி) அருகே ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இன்று (ஜூன் 29) அதிகாலை 1 மணி அளவில் பயிற்சியின்போது, டேங்கர் லாரியில் ராணுவ வீரர்கள் ஆற்றைக் கடக்க முயன்றுள்ளனர். அப்போது, ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 5 ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மந்திர் மோர் என்ற இடம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விபத்தை அடுத்து, மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours