பிரதமர் மோடியின் காலில் விழுந்து குறித்து வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
மக்களவையில் பெண்களுக்குகான 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வரைவு சட்டதிற்க்கு 454 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், மக்களவையில் அம்மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் சிறப்புக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில்,டெல்லி பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து, பூக்கள் தூவி பெண் நிர்வாகிகள் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தனர்.அப்போது தமிழகத்தை சேர்ந்த கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி காலில் விழுந்து வழங்கினார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.தற்பொழுது பிரதமர் மோடியின் காலில் விழுந்து குறித்து வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,மகளிர் அணி சார்பில் அவரை வரவேற்றோம். அப்பொழுது நான் அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றேன். ஆனால் அவரோ, உங்களின் வணக்கத்தை ஏற்கிறேன். ஆனால் காலில் விழுவது எனக்கு பிடிக்காது. இனி இதுபோல் செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கினார்” என்றார்.
+ There are no comments
Add yours