ஹரியானா மாநிலம் ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட 6116 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்த நிலையில் காங்கிரஸ் ஆரம்ப கட்டத்தில் முன்னிலை வகித்தாலும் தற்போது பாஜகவுக்கு சாதகமாக முடிவுகள் செல்வது ஆம் ஆத்மி, ஜேஜேபி போன்ற கட்சிகள் காங்கிரஸுக்கான வாக்குகளைப் பிரித்ததால் ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் சார்பாக ஜுலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ் போகத் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 6116 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியிருக்கிறார். ஆரம்பத்தில் பின்னடைவு, முன்னிலை என்று மாறி மாறி வந்தாலும் இறுதியில் வெற்றி பெற்றிருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours