அகதிகளாக தமிழகம் வந்த 7 இலங்கை தமிழர்கள்..!

Spread the love

இலங்கையில் சமீப காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிப்புக்குள்ளாகி உள்ளது. ஒருவேளை உணவிற்கு கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக அங்குள்ள மக்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகவும் கண்டன குரல்களை எழுப்பி வந்தனர்.

தற்போது இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஓரளவிற்கு சீரான நிலையில் இருந்தாலும், இன்னமும் கடுமையான வறுமைக்குள் வாழ்கின்ற மக்களும் இருக்க தான் செய்கின்றனர். இதனால், இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருகை தருகின்றனர்.

அந்த வகையில், இன்று யாழ்ப்பாணத்தை சேர்ந்த 7 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் வருகின்றனர். விசாரணைக்கு பின் 7 பேரும், மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட உள்ளனர். ஏற்கனவே அகதிகளாக வந்தவர்களும் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் இந்த 7 பெரும் தங்க வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours