இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் மற்றும் அந்தந்த மாநிலகட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன
இந்நிலையில் பாஜக இன்று காலை தேர்தல் பிரச்சார பாடல் ஒன்றை வெளியிட்டது. இந்தியில் உள்ள அந்த பாடல், “கனவுகள் அல்ல, நாம் நிஜத்தில் பார்க்கிறோம், அதனால்தான் எல்லோரும் மோடியைத் தேர்வு செய்கிறார்கள்” என்றகருத்துகளை உள்ளடக்கியுள்ளது.
சுமார் 2.13 நிமிடங்கள் ஒலிக்கும் இந்த பாடலில், “இந்தியாவின் நிலைமை மோசமாக இருந்தது. பின்னர் நாடு‘நமோ‘ (நரேந்திர மோடி)-யை பிரதமராகத் தேர்ந்தெடுத்தது. ‘நமோ‘ தனது வாக்குறுதியைக் காப்பாற்றினார். ஒருவளர்ந்த நாட்டின் கனவு வெறுமனே கனவாகவே இருக்கவில்லை. ‘நமோ‘ சரியான பாதைகளைத் தேர்ந்தெடுத்துகனவை நனவாக்கினார். அதனால்தான் எல்லோரும் மோடியை தேர்வு செய்கிறார்கள்” என்ற வரிகள்இடம்பெற்றுள்ளன.
பிராச்சாரப் பாடலில் இடம் பெற்ற காட்சிகள்.
மேலும், “அவர் பாரதத்தை தனது தாயாகவும், நாட்டு மக்களைக் கடவுளாகவும் கருதுகிறார். அவர் புகழுக்கு முன்வேலையைத் தேர்வு செய்கிறார். அதனால்தான் ஒவ்வொருவரும், (ஒவ்வொரு நாடும்) அவரது பேச்சைக்கேட்கிறார்கள். ஊழல் செய்பவர்கள் பயப்படுகிறார்கள். இந்திய பெண்கள் தலைவர்களாக உருவெடுத்தனர். அவர்அடித்தட்டு மக்களுடன் நெருங்கி இருந்தார். அதேநேரத்தில் வானையும் அடைந்தார் (சந்திரயான் திட்டம்)” எனபாடல் வரிகள் மோடி அரசின் சாதனைகளை விவரிக்கின்றன.
பல்வேறு தரப்பட்ட மக்களுக்கான பிரதமர் மோடியின் திட்டங்கள், வெளியுறவுக் கொள்கை வெற்றி, நாட்டின்உள்கட்டமைப்பு வசதி, விவசாயம், கல்வி, பெண்கள் முன்னேற்றம், அடித்தட்ட மக்களுக்கு வீடுகள் போன்ற மோடிதலைமையிலான பாஜக அரசின் சாதனைகளைப் பிரச்சாரப் பாடல் காட்சிப்படுத்துகிறது. கடைசியாக கடவுள்ராமருடன் இந்த பாடல் நிறைவடைகிறது
+ There are no comments
Add yours