ராணுவ ஒத்திகைப் பயிற்சியை பார்வையிட்டார் பிரதமர் மோடி!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று ’பாரத் ஷக்தி’ என்ற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. அதைதொடர்ந்து முப்படைகளின் ஒத்திகைப் பயிற்சியும் நடத்தப்பட்டது. 50 நிமிடங்கள் நடந்த இந்த ஒத்திகையை பிரதமர் மோடியுடன் 40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.

இந்த ஒத்திகையில், கடற்படை ஏவுகணைகள், விமானப்படை தேஜஸ் இலகுரக போர்விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள், டேங்கர்கள் உள்பட பல்வேறு ராணுவ உபகரணங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. துல்லியமான வழிகாட்டும் ஏவுகணை, தகவல் தொழில்நுட்ப அமைப்பு, தானியங்கி ஸ்பெக்ட்ரம் கண்காணிப்பு அமைப்பு போன்ற மேலும் சில புது தொழில்நுட்பங்களும் பரிசோதிக்கப்பட்டன.

மேலும், டி90 ரக ரேங்கர்கள், தனுஷ் மற்றும் சாரங் போர் துப்பாக்கி அமைப்புகள் போன்றவையும் மேம்படுத்தப்பட்ட வான்வழி போர் சாதனங்கள் ஒத்திகையில் இடம்பெற்றன. அதேபோல், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், சரக்கு கப்பல்கள் மற்றும் வான்வழியில் இலக்குகளை தாக்கும் விமானங்கள், இலகுரக ஹெலிகாப்டர்கள் இந்த ஒத்திகையில் காட்சிப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மட்டுமின்றி இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களின் ராணுவ ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours