எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கி உள்ள இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சியானது, பஞ்சாபில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளையும் (13 தொகுதிகள்) வெல்லும் என கூறியுள்ளது.
இதுகுறித்து மாநில முதல்வர் பகவந்த் மான் கூறும்போது, ‘‘மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும். 13 தொகுதிகளையும் நாங்கள் கைப்பற்றுவோம். தேர்தல் பணிகளில் ஆம் ஆத்மி கட்சித்தொண்டர்கள் சிறப்பாக ஈடுபட வேண்டும்’’ என்றார்.
இண்டியா கூட்டணியில் இணைந்துள்ள ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் சில கட்சிகள் பிடிவாதம் பிடித்து வருகின்றன. இந்நிலையில், ஆம் ஆத்மி மூத்த தலைவரான பகவந்த்மான், பஞ்சாபில் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என அறிவித்திருப்பது இண்டியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours