சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நிறைய கட்சிகள் கூட்டணிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளது; பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை. தேர்தல் பணியில் மாவட்ட செயலர்கள் தலையீடு இருந்தால் புகாரளிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
நமது ஒரே எதிரியான திமுகவை தோற்கடிப்பது தான் இலக்கு; தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடைபெறுகிறது; லியோ பட விவகாரத்தில் வேண்டுமென்றே தொல்லை கொடுக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தாலே இதுதான் பிரச்னை, திரைத்துறை சுதந்திரமாக செயல்படாது.
அதிமுக ஆட்சியின் போதே விஜய் படம் வெளியாக எவ்வித சிக்கலும் இல்லாமல் வெளியிட வழி வகுத்தது என தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவில் இருந்து சென்றவர்கள், அடையாளம் இல்லாமல் தொலைந்து போனவர்கள் என விமர்சித்துள்ளார்.
+ There are no comments
Add yours