”காவல் துறைக்கே பாதுகாப்பு இல்ல..” அப்புறம் எதுக்கு மகளிர் உரிமை மாநாடு..!!

Spread the love

முதலமைச்சரின் துறையான காவல்துறை மகளிருக்கே பாதுகாப்பு இல்லாமல், வெறும் விளம்பரத்திற்காக மகளிர் உரிமை மாநாடு எனும் நாடகத்தை நடத்துவதால் என்ன பயன்?என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த ஜனவரி 2 ஆம் தேதி சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விருந்தினர்களாக திமுக எம்பிக்கள் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோருடன் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 22 வயது பெண் காவலர் ஒருவரிடம், கூட்டத்தில் இருந்த 2 இளைஞர்கள் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் எல்லை மீற பெண் காவலர் கதறி அழுதுள்ளார். உடன் பணியில் இருந்த சக ஆண் காவலர் இதனை தட்டி கேட்டதும், சில்மிஷ பேர்வழிகள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

ஆய்வாளர் தாம்சன்சேவியர் தலைமையிலான போலீஸார் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் சாலிகிராமத்தை சேர்ந்த பிரவீன்(23), சின்மயா நகரை சேர்ந்த ஏகாம்பரம்(24) என்பதும், இருவரும் திமுக நிர்வாகிகள் என்பதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..

கடந்த 31/12/2022 அன்று, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி அவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலரை பாலியல் சீண்டல்கள் செய்த திமுக ரவுடிகள் பிரவீன், ஏகாம்பரம் இருவரையும், தமிழக பாஜகவின் அழுத்தம் காரணமாக, பல நாட்களுக்குப் பிறகு கைது செய்து, வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 13/10/2023 அன்று விசாரணைக்கு வந்த நிலையில், 12/10/23 அன்று மாலை, கே.கே. நகர் வடக்கு திமுக பகுதி துணைச் செயலாளர் விஜயகுமார் எனும் நபர், விருகம்பாக்கம் காவல்நிலையத்திற்குள் புகுந்து, பாதிக்கப்பட்ட பெண் காவலரிடம், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா அனுப்பியதாகவும், நீதிமன்ற விசாரணையின் போது, குற்றவாளிகளுக்கு எதிராக எதுவும் கூறக்கூடாது எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக, விருகம்பாக்கம் காவல் ஆய்வாளரிடம், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெண் காவலரை சமாதானமாக போகச் சொல்லுங்கள், வீணாக பிரச்சினைகள் வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காவலரின் தொலைபேசி எண்ணையும் கேட்டுப் பெற்றுள்ளார் எனத் தெரிகிறது.

பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தியையும் பிரியங்காவையும் அழைத்து, மகளிர் உரிமை மாநாடு என்ற நாடகத்தை ஒருபுறம் நடத்திக் கொண்டிருக்கிறது திமுக.

காவல்துறையில் பணிபுரியும் பெண்களுக்கே இந்த நிலை என்றால், சாமானியப் பெண்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். முதலமைச்சரின் துறையான காவல்துறை மகளிருக்கே பாதுகாப்பு இல்லாமல், வெறும் விளம்பரத்திற்காக மகளிர் உரிமை மாநாடு எனும் நாடகத்தை நடத்துவதால் என்ன பயன்?என்று கேள்வியெழுப்பியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours