கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலை நேற்று கவுண்டம்பாளையம் தொகுதிக்கான தேர்தல் ஊழியர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கோவையில் ரெண்டு டிகிரி வெயில் அதிகரித்திருக்கிறது. கோயமுத்தூரில் என்ன அடிப்படை மாற்றம் செய்துள்ளார்கள், ஊரை சூடேற்றியதுதான் மிச்சம்.
குளுமையாக அமைதியாக இருக்கக்கூடிய ஊரை இன்னைக்கு ரெண்டு டிகிரி, மூணு டிகிரி வெப்பநிலையை ஏற்றி இருக்கிறார்கள். ஒரு டூவிலரில் இந்த ஊரில் போக முடியுமா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சூலூரில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சரும், கோவை நாடாளுமன்ற பொறுப்பாளருமான டி ஆர் பி ராஜா பேசுகையில்,
பாஜக பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தது. அப்பவும் ஒண்ணும் செய்யவில்லை. அதிமுக எதுவும் செய்யவில்லை. அப்ப, எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழக மக்களிடம் வாக்கு சேகரிக்க முடியும் . அதனால்தான் 3 டிகிரி 5 டிகிரி கதையெல்லாம் சொல்லிட்டு இருக்காங்க. இவர்களுக்கெல்லாம் தேர்தல் சூடு தாங்காது.
தேர்தல் சூடு என்றால் என்னவென்று தெரியாது. இன்னும் அடுப்பே பற்றவைக்கவில்லை தம்பி. அதுக்குள்ள சூடுது, சூடுதுன்னு சொன்னா என்ன பன்றது, புரிந்தவர்களுக்கு புரியும்” என்றார்.
+ There are no comments
Add yours