மிசோரம் சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓயும் நிலையில் லோக் போல் தனது இறுதிக்கட்ட கருத்துக் கணிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை. மிசோரம் சட்டசபைக்கு ஒரே கட்டமாக நாளை மறுநாள் (நவம்பர் 7) தேர்தல் நடைபெற உள்ளது. டிச.3 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்று மாலை முதல் நவம்பர் 30-ம் தேதி வரை கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது. தேர்தல் பிரச்சாரம் இன்னும் சிறிது நேரத்தில் முடிவடைய உள்ள நிலையில் லோக் போல் நிறுவனம் இறுதி கட்ட கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 19,380 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மிசோ தேசிய முன்னணி 12 முதல் 14 இடங்களை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் கட்சியும் அதேபோல 12 முதல் 14 இடங்களில் வெற்றி பெறும் என்றும் தெரிய வந்திருக்கிறது.
ஜோரம் மக்கள் இயக்கம் 10 முதல் 12 இடங்களையும், இதர கட்சிகள் 0 முதல் 3 இடங்கள் வரையில் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் மிசோ தேசிய முன்னணியும் காங்கிரஸும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க அதிகம் வாய்ப்பு இருக்கிறது. அல்லது மிசோ தேசிய முன்னணி – ஜோரம் மக்கள் இயக்கம் ஆகிய இரு மாநில கட்சிகளும் கூட கை கோர்க்கலாம்.
இந்த மாநிலத்தில் பாஜக களத்திலேயே இல்லை என்பதையும் லோக் போல் இறுதி கட்ட சர்வே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
+ There are no comments
Add yours