அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணி வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இதுதொடர்பாக அதிமுக அறிக்கையும் வெளியிட்டது.
இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக நிர்வாகிகளும் பாஜகவில் கூட்டணி இல்லை என தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்திலும், பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என அனைவரிடமும் அழுத்தம் திருத்தமாக சொல்லுங்கள் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எப்போது இந்த கூட்டணியில் இருந்து விலகுவோம் என எதிர்பார்த்துக் கொண்டே இருந்தோம்.
தற்போது பாஜக என்ற சைத்தான் கூட்டணியிலிருந்து வெளியேறியதில் நாங்கள் 100 மடங்கு மகிழ்ச்சி. கூட்டணி முறிவால் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியாக உள்ளார். பிஜேபியால் அதிமுக வளரவில்லை, அதிமுகவால் தான் பிஜேபி வளருகின்றது. நாங்கள் இனிமேல் செத்தாலும் பிஜேபி கூடவோ அல்லது சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளவர்கள் யாருடனும் சேர மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours