மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை வரும் 22-ம் தேதி திருச்சியில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார். அப்போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.
மக்களவைத் தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதன் தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை – தயாநிதி மாறன், வட சென்னை – கலாநிதி, ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் – செல்வம்வேலூர் – கதிர் ஆனந்த், அரக்கோணம் – ஜெகத்ரட்சகன், திருவண்ணாமலை – அண்ணாதுரை, ஆரணி – தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி – மலையரசன், தருமபுரி – மணி, கோவை – கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி – ஈஸ்வரசாமி, சேலம் – டி.எம்.செல்வகணபதி, ஈரோடு – பிரகாஷ், நீலகிரி (தனி) – ஆ.ராசா, தஞ்சாவூர் – முரசொலி, பெரம்பலூர் – அருண் நேரு, தேனி – தங்க தமிழ்செவன், தென்காசி (தனி) – ராணி, தூத்துக்குடி – கனிமொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சி, மாநிலம், நாட்டின் நலன் கருதி சொந்த விருப்பு வெறுப்பின்றி தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், தமிழக முதல்வரின் தேர்தல் சுற்றுப்பயண விவரம் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை வரும் 22-ம் தேதி திருச்சியில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார்.
மார்ச் 22-ம் தேதி திருச்சி, பெரம்பலூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம் செய்கிறார். 23-ம் தேதி தஞ்சாவூர் மற்றும் நாகை தொகுதிகள், 25-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி தொகுதிகள், 26-ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம் தொகுதிகள், ஏப்.16-ம் தேதி காஞ்சிபுரம், பெரும்புதூர் தொகுதிகள், ஏப்ரல் 17-ம் தேதி தென்சென்னை, மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
+ There are no comments
Add yours