ஓபிஎஸ் விரைவில் சிறைக்கு செல்வார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்தித்தார்.
அப்போது தெரிவித்ததாவது:
தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தாழ்வான பகுதி மக்களை முன்கூட்டியே முகாம்களில் சேர்த்திருக்க வேண்டும்.
தூத்துக்குடியிலும் பாலங்கள் இடிந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காயல்பட்டினத்திலும் உப்பலங்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதிகாரிகள் மக்களை சென்று பார்க்கவே இல்லை. எங்கள் ஆட்சியின் போது கஜா புயல் அடித்தது. ஆனால், இப்போது பெரிய காற்று இல்லை.
வர்தா புயலின் போதும் கடுமையான பாதிப்பு. 6 லட்சம் மரங்கள் விழுந்தன. 2 லட்சம் மரங்களை குப்பைகளாக அகற்றினோம்.
அப்போது, போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு உரிய அத்தியாவசிய பொருள்கள் கொடுத்தோம். மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்கும் பொறுப்பு உள்ளது.
பாஜக உடன் கூட்டணி இல்லை என்றவுடன் திமுகவினர் புலம்புகிறார்கள்.ஓபிஎஸ் விரைவில் சிறைக்கு செல்ல உள்ளார்.
பல வழக்குகளில் சிறைக்கு செல்ல உள்ளார் என்று எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours