ஐபோன் பயன்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அனுப்பியுள்ள செய்தியால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக 4 எம்.பி.க்கள் உட்பட 10 தலைவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் செய்தி அனுப்பியுள்ளது.
எம்.பி.க்கள் சசிதரூர், மஹுவா மொய்த்ரா, ராகவ் சத்தா, பிரியங்கா சதுர்வேதி ஆகியோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரின் செல்போன்களும் ஒட்டுகேட்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா உள்ளிட்டோரின் செல்போன்களும் ஒட்டுக்கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மூத்த பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் உள்ளிட்டோரின் செல்போன்களும் ஒட்டுகேட்கப்பட்டுள்ளது.
அரசின் ஏற்பாட்டில் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக சம்பந்தப்பட்ட எம்.பி.க்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்படுவதாக 2019-ல் சர்ச்சை ஏற்பட்டது.
தற்போது, தங்கள் செல்ஃபோன்களை அரசு உளவு பார்க்க முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்பி சசி தரூர், திரிணமூல் எம்பி மகுவா மொய்த்ரா உள்ளிட்டோர் புகார் அளித்துள்ளனர்.
ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய குறுஞ்செய்தியை சுட்டிக்காட்டி குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சசி தரூர், மகுவா மொய்த்ரா, பிரியங்கா சதுர்வேதி, பவன் கெரா புகார் அளித்துள்ளனர்.
படங்கள், குறுந்தகவல்கள், அழைப்பு விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை பெறும் முயற்சியும் நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours