அமர்நாத் பனி லிங்கம் பக்தர்களுக்கு இன்று முதல் தரிசனம் !

Spread the love

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகை கோவிலில் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் யாத்திரை இன்று முதல் துவக்கம்.

அமர்நாத் யாத்திரை முதல் குழு காஷ்மீரில் இருந்து புறப்பட்டது. ஆண்டுதோறும் பனிலிங்கத்தை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்து, பக்தர்கள் அமர்நாத் வருவது வழக்கம். இந்த ஆண்டு யாத்திரை இன்று (ஜூன்28) துவங்கியது. காஷ்மீரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து 2 குழுக்கள் சென்றன முதல்கட்டமாக பகவதிநகரில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் இருந்து பக்தர்கள் குழு புறப்பட்டு சென்றது. கவர்னர் மனோஜ் சின்கா கொடி அசைத்து துவக்கி வைத்தார். பக்தர்கள் ஹர, ஹர மஹாதேவா என்ற கோஷங்கள் எழுப்பினர். யாத்திரையை முன்னிட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours