நிதி சார்ந்த துறையில் இந்த மாதத்தில் வந்துள்ள முக்கியமான 5 மாற்றங்கள் குறித்து அறிந்து கொள்வோம்.
- ஆக்ஸிஸ் வங்கியின் மேக்னஸ் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கான வருடாந்திர கட்டணம் நேற்று முதல் உயர்ந்தது. இதுவரை 10 ஆயிரம் ரூபாயுடன் ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டியிருந்தது. இனி ரூ.12,500 மற்றும் அதனுடன் ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும். மேலும் மேக்னஸ் கிரெடிட் கார்டு உடன் வழங்கப்படும் சலுகைகளும் மாற்றப்பட்டுள்ளதாக ஆக்ஸிஸ் வங்கி ஏற்கனவே தெரிவித்துள்ளது.
- ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு இந்த மாதத்துடன் முடிவடைகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ), ஆதார் அடையை இலவசமாக புதுப்பிப்பதற்கு ஜூன் 14 முதல் செப்டம்பர் 14, 2023 வரை அவகாசம் வழங்கியிருந்தது.
10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதாரை அட்டையை, மக்கள் புதுப்பித்து கொள்வதற்கான இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
- 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்வதற்கான காலக்கெடு இம்மாதத்துடன் நிறைவடைகிறது.
செப்.,30ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் 2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றலாம் அல்லது டெபாசிட் செய்யலாம்.
ஒரே நேரத்தில் 20,000 ரூபாய் வரை டெபாசிட்டோ அல்லது குறைந்த மதிப்புள்ள நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
- நடப்பு நிதியாண்டின் துவக்கத்தில் இருந்து, பொது வருங்கால வைப்பு நிதி (பி.பி.எஃப்.,), தபால் அலுவலக சேமிப்புத் திட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் போன்ற சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு நிரந்தர கணக்கு எண் (பான்) மற்றும் ஆதார் அட்டையை மத்திய நிதி அமைச்சகம் கட்டாயமாக்கியது. ஏற்கனவே சேமிப்பு திட்டங்களில் சேர்ந்த சந்தாதாரர்கள், செப்டம்பர் 30ம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் கணக்குகள் முடக்கப்படும்.
- டிரேடிங் மற்றும் டீமேட் கணக்குகளுக்கான நாமினி வசதியை பூர்த்தி செய்ய செப்.,30ம் தேதியுடன் காலக்கெடு நிறைவடைகிறது. கடந்த மார்ச்சில் செபி, நாமினி தொடர்பான மாற்றம் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்தது.
திருத்தப்பட்ட காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
+ There are no comments
Add yours