சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது!

Spread the love

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிவில் இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று காலையில் கோலாகலமாக நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். சிவபெருமானின் பஞ்சசபையில் பொற்சபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது சிதம்பரம் நடராஜர் ஆலயம். இந்த கோயிலில் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்தது.

மார்கழி திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். ஈசன் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை காட்டி அருளிய தினமே ஆருத்ரா தரிசன நாள் ஆகும். 23 தீர்மானத்தில்.. இதை மட்டும் கவனிச்சீங்களா? பாஜகவை சூடாக்கும் ஒரு முடிவு.. அடடா எடப்பாடியா இது? திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருவாதிரை திருநாளில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது தில்லை நடராஜருக்கு, களி நைவேத்தியம் படைக்கப்படுகிறது. திருவாதிரையில் ஒரு வாய்க்களி’ என்பது சொல் வழக்கு. திருவாதிரை தினத்தன்று, தில்லை நடராஜரை நினைத்து விரதம் இருந்து களி செய்து சிறிதேனும் சாப்பிட நன்மைகள் நடைபெறும். சிதம்பரத்தில் இந்த ஆண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த 18ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயில் கருவறை முன் உள்ள கொடிமரத்தில் தீட்சிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றினார். இதில் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நடராஜ பெருமானை தரிசனம் செய்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours