இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது ?

Spread the love

பொதுப்பலன்: மருந்துண்ண, மூலிகை பறிக்க, புனித நதிகளில் நீராட, தொழில் தொடங்க, ஆலோசனை, தீட்சை பெற, பரிகார பூஜை செய்ய, அன்னதானம் செய்ய நல்ல நாள். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை அணிவித்தால் நன்மை உண்டு. நவகிரக குரு பகவானுக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தடைகள் விலகும்.

மேஷம்: மாறுபட்ட அணுகுமுறையால் தடைபட்ட வேலைகளை முடித்து காட்டுவீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

ரிஷபம்: இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

மிதுனம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். பங்குதாரர்களுடன் இணைந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். முக்கிய பதவிக்கு தேர்வு செய்யப் படுவீர். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டுவார்.

கடகம்: வெகுநாட்களுக்குப் பிறகு சிலரை சந்திப்பீர்கள். மனைவிவழி உறவினர்களால் நிம்மதியுண்டு. உடல்
சோர்வு, தலைவலி விலகும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் வீண் விவாதங்களைத் தவிர்த்துவிடவும்.

சிம்மம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். தாயாரின் உடல் நிலை சீராக அமையும். அலைச்சல், டென்ஷன் குறையும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கன்னி: நினைத்த காரியம் நிறைவேறும். மனக் குழப்பங்கள் நீங்கும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சி ஏற்பாடாகும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

துலாம்: குடும்பத்தினரை அனுசரித்து போவது நல்லது. மன இறுக்கம், உடல் சோர்வு வந்து போகும். வாகனம் செலவு வைக்கும். யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். சக ஊழியர்கள் ஆதரிப்பர்.

விருச்சிகம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். புதிய பதவி கிடைத்து மதிப்பு உயரும்.

தனுசு: வேற்றுமொழி, மதத்தினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தினரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.

மகரம்: வீண் விவாதங்களை குறைத்து தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய வழக்கு உங்களுக்கு சாதகமாகும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கும்பம்:வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். பழைய கசப்பான சம்பவங்களை மறப்பீர்கள். தாய்வழி உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் ஈட்டுவீர். அலுவலகத்தில் மேலதிகாரி, சக ஊழியர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவர்.

மீனம்: திட்டமிட்ட வேலையை சிறப்பாக முடிப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours