இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
முதல் இன்னிங்ஸ்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 112 ஓவர்களில் 396 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து ஒற்றை ஆளாக போராடி இந்திய அணிக்காக சிறப்பான இன்னிங்ஸ் ஆடினார். இதன் போது கேப்டன் ரோஹித் சர்மா 14 ரன்களிலும், சுப்மன் கில் 34 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினர்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களிலும், அறிமுக வீரர் ரஜத் படிதார் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அக்சர் படேலும் 27 ரன்களுடனும், அஸ்வின் 20 ரன்களுடம் ஏமாற்றம் அளித்தன. இதனிடையே பின்னாடி வந்த குல்தீப் யாதவ், பும்ரா ஒற்றை இலக்குகளில் வெளியேற இந்திய அணி 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி சார்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்திருந்தார். வேறு எந்தவொரு இந்திய வீரரும் 50 ரன்களை கூட கடக்கவில்லை.
இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், பஷீர் மற்றும் ரெஹான் அஹமது தலா 3 விக்கெட்களும், டாம் ஹார்லி ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தனர்.
+ There are no comments
Add yours