யுவராஜ் சிங் வீட்டில் திருட்டு!

Spread the love

ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலாவின் எம்டிஏசெக்டாரில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரஆட்டக்காரர் யுவராஜ்சிங்கின் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

யுவராஜ் சிங்கின் வீட்டிலுள்ள அலமாரியில் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் பணம் மற்றும் நகைகள் திருடுபோய்உள்ளதுஇதுபற்றி யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங்போலீசில் புகார் அளித்துள்ளார்அந்த புகாரில்வீட்டுவேலை செய்து வந்த லலிதா தேவி மற்றும் பீகாரைச் சேர்ந்த சமையல்காரர் சில்தார் பால் ஆகியோர் மீது சந்தேகம்இருப்பதாகத் தெரிவித்துள்ளார்அதன்பேரில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளதுசவுரவ் கங்குலி சமீபத்தில் தாகூர்புகூர் காவல்நிலையத்தில் தனது வீட்டில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன்திருடப்பட்டதாக பிப்ரவரி 11 சனிக்கிழமையன்று போலீஸில் புகாரளித்தார்தொலைந்து போன செல்போனில்தனிப்பட்ட தகவல்கள் உள்ளனமேலும் தவறான பயன்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனஅதிகாரிகளை வலியுறுத்தினார்அந்த சம்பவம் நடந்த சில தினங்களில் இப்போது யுவராஜின் வீட்டில் கொள்ளசம்பவம் நடந்துள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைபடைத்துள்ளார்அதில்சர்வதேச டி 20 அரங்கில் அதிவேகமாக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில்உள்ளார் யுவராஜ் சிங்இவர் 12 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்இது தவிரடி20 சர்வதேசப் போட்டியில் ஒரேஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்கடந்த 2007 டி20 உலகக்கோப்பையின் போதுஇங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்தார். 2011 உலகக்கோப்பைக்கு பிறகுயுவராஜ் சிங்கிற்கு மார்பில் புற்றுநோய் கட்டி இருந்தது தெரியவந்ததுஇதற்காக சிகிச்சைஎடுத்துகொண்ட யுவராஜ் சிங்புற்றுநோயில் இருந்து மீண்டு மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

யுவராஜ் சிங் இந்திய அணிக்காக இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் உள்பட 1900 ரன்கள் எடுத்துள்ளார்மேலும்அவர் இந்தியாவுக்காக 304 ஒருநாள் போட்டிகளில்விளையாடி 14 சதங்களும், 52 அரை சதங்களும் உள்பட 8701 ரன்கள் குவித்துள்ளார்டி20 சர்வதேச போட்டிகளில்இந்திய அணிக்காக யுவராஜ் 1,177 ரன்கள் எடுத்தார்இடது கை சுழற்பந்து வீச்சாளரான யுவராஜ் டெஸ்டில் 9 விக்கெட்டுகளையும்ஒருநாள் போட்டியில் 111 விக்கெட்டுகளையும்டி20 சர்வதேச போட்டியில் 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours