ஒலிம்பிக் திருவிழாவிற்கு இந்தியாவில் இருந்து 117 வீரர்கள்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

Spread the love

புதுடெல்லி: 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வரும் 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக் திருவிழாவில் இந்தியாவில் இருந்து 117 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவர்களுடன் 140 பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பயணிக்க உள்ளனர்.

இந்திய அணியில் குண்டு எறிதல் வீராங்கனையான அபா கதுவாவின் பெயர் விடுபட்டுள்ளது. அவர், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு உலக தடகள அமைப்பு வெளியிட்ட பட்டியலிலும் அபா கதுவா பெயர் இடம் பெறவில்லை. அவர், நீக்கப்பட்டுள்ளதற்கான எந்தவித காரணமும் தெரிவிக்கப்படவில்லை.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours