தமிழ்நாடு தடகளக் கூட்டமைப்பின் சார்பில் 14 முதல் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை முதல் 10ஆம் தேதி வரை கோவையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
இதில் பேசிய தமிழ்நாடு தடகளக் கூட்டமைப்பின் மாநில செயலாளர் லதா, இந்த போட்டிகளில் 29 மாநிலங்களில் இருந்து சுமார் 2200 தடகள வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள் எனவும், இதில் தமிழகத்தில் இருந்து 175 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
மேலும், இப்போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் எட்டு பிரிவுகளில் நடத்தப்பட உள்ளதாகவும், இந்த போட்டிகளுக்கான விரிவான ஏற்பாடுகள் தமிழ்நாடு தடகளக் கூட்டமைப்பின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நாளை நடைபெறும் துவக்க விழாவில் மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு போட்டிகளை துவக்கி வைப்பார் என கூறியதோடு, சமீபத்தில் புதிய சிந்தடிக் ஓடுதலும் அமைத்து புனரமைக்கப்பட்டு, தமிழக முதலமைச்சர் அவர்களால் திறக்கப்பட்ட நேரு விளையாட்டு அரங்கத்தில் இந்த போட்டிகள் நடத்தப்படுவது கூடுதல் சிறப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.
+ There are no comments
Add yours