இந்தியா,பாகிஸ்தான் மோதல்…! ஹாட்ரிக் வெற்றியை பெறுவது யார்..?

Spread the love

இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உலகக்கோப்பையின் 12-வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இரு அணிகளும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும். நடப்பு உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் இரு அணிகளின் ஃபார்ம் சிறப்பாக உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் நெதர்லாந்து மற்றும் இலங்கையை பாகிஸ்தான் தோற்கடித்துள்ளனர்.

இதனால் இரு அணிகளும் ஹாட்ரிக் வெற்றியை இலக்காகக் கொண்டுள்ளனர். இந்த போட்டிக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். இந்த மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்களை குவிக்கிறார்கள். மேலும் வேகப்பந்து வீச்சாளர்களும் இந்த மைதானம் நல்ல உதவியாக இருக்கும். நடப்பு உலகக் கோப்பையின் முதல் போட்டியும் இந்த மைதானத்தில்தான் நடைபெற்றது. 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களில் வெற்றி பெற்றது.

நரேந்திர மோடி மைதானத்தில்இதுவரை மொத்தம் 29 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 16 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 237 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 206 ரன்களும் ஆகும். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பான பார்மில் உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முழு நம்பிக்கையுடன் உள்ளது. ஒவ்வொரு வீரரும் நல்ல பார்மில் உள்ளனர்.

இன்றைய போட்டியில் சுப்மான் கில் 99 சதவீதம் ஆடும் லெவனில் இடம்பெறுவார் என கிரிக்கெட் வட்டாரம் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் சுப்மான் கில் அவர் விளையாடுவாரா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அணியில் இடம்பெறுவாரா..? என்பது போட்டிக்கு முன்னதாக தான் தெரியவரும், நேற்றைய பயிற்சி அமர்வில் சுப்மான் கில் மைதானத்தில் இருந்தார். சுப்மான் கில் விளையாடினால், இஷான் கிஷன் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் இவர்களில் ஒருவர் மட்டுமே ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள்.

பாகிஸ்தான் விளையாடும் ஆடும் லெவன் பற்றி பேசுகையில், ஃபகார் ஜமானுக்கு பதிலாக அப்துல்லா ஷபிக் கடைசி போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கடைசி போட்டியில் ஷபிக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அத்தகைய சூழ்நிலையில் இமாம் உல் ஹக் மற்றும் கேப்டன் பாபர் அசாம் ஆகியோரின் ஃபார்ம்தான் பாகிஸ்தானுக்கு சிக்கலுக்கு காரணம். வேகப்பந்து வீச்சாளர் எப்போதுமே பாகிஸ்தான் அணிக்கு பிளஸ் பாயிண்ட்டாக இருந்து வந்தாலும், தற்போது அது தெரியவில்லை.

ஷாஹீன் அப்ரிடி பந்து வீச்சில் முன்பு போல பெரும் தாக்கத்தை ஏற்படுத்தமுடியாமல் போராடி வருகிறார். பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது. ஷதாப் கானைத் தவிர, முகமது நவாஸ், இப்திகார் அகமது ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை.

இந்திய அணியில் எதிர்பார்க்கப்படும் ஆடும் லெவன்:

ரோகித் சர்மா (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, இஷான் கிஷன், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி.

பாகிஸ்தான் அணியில் எதிர்பார்க்கப்படும் ஆடும் லெவன்:

பாபர் அசாம் (கேப்டன்), அப்துல்லா ஷபிக், ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், சவுத் ஷகீல், சல்மான் அலி ஆகா, இப்திகார் அகமது, முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், ஷதாப் கான், அப்ரார் அகமது, ஹரிஸ் அலி, முகமது வாசிம், ஷஹீன் அப்ரிடி மற்றும் உஸ்மான் மிர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours