தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 603 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்திய பெண்கள் அணி. 600 ரன்களைக் கடந்த முதல் பெண்கள் கிரிக்கெட் அணி என்ற பெருமையையும் அடைந்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென்னாப்பிரிக்கா பெண்கள் அணி 3 ஒரு நாள் போட்டிகள், ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒரு நாள் போட்டித் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் ஷபாலி வர்மாவின் இரட்டை சதம் மற்றும் ஸ்மிருதி மந்தனாவின் சதம் காரணமாக இந்திய அணி 525 ரன்கள் குவித்து இருந்தது.
இன்று 2வது நாள் ஆட்டம் துவங்கிய போது ஜெமிமா ரோட்ரிக்ஸ் 55 ரன்களிலும், ஹர்மன்பிரீத் கவுர் 69 ரன்களிலும், ரிச்சா கோஷ் 86 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் பல்வேறு சாதனைகளை இந்திய பெண்கள் அணி படைத்துள்ளது. டெஸ்ட் போட்டியில் 600 ரன்களுக்கும் மேல், முதல் இன்னிங்ஸில் அடித்த முதல் அணி என்ற சாதனையை இந்திய பெண்கள் அணி படைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா தரப்பில் டெல்மீ டக்கர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா இன்று குவித்துள்ள 603/6 தான் டாப் ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 575/9 (பிப்ரவரி 2024) ரன்கள் குவித்ததும், ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்துக்கு எதிராக 569/6 (ஆகஸ்ட் 19980 ரன்கள் குவித்ததும், ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு எதிராக 525 (ரன்கள் குவித்ததும், நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிராக 517/8 ரன்கள் ஜூன் 1996ல் குவித்தவையே இதுவரை அதிகபட்ச ஸ்கோராக இருந்து வந்தது.
+ There are no comments
Add yours