பந்துவீச முடிவு செய்த கொல்கத்தா !

Spread the love

ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள 13வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன.

Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders IPL 2024 Live Score: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் – 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த 22 ஆம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள 13வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன.

பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் வீழ்ந்தது. அடுத்து சொந்த மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.

2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை சாய்த்தது. இந்த இரு அணிகளும் 2-வது வெற்றியை வசப்படுத்த போராடும் என்பதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பெங்களூரு Vs கொல்கத்தா நேருக்கு நேர்

ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பெங்களூரு 14ல் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், கொல்கத்தா 18 முறை வெற்றி பெற்றுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours