லண்டன்: செஸ் மாஸ்டர்ஸ் தொடரின் காலிறுதியில் பிரக்ஞானந்தா, ஆனந்தை வீழ்த்தினார்.
இங்கிலாந்தின் லண்டனில் செஸ் மாஸ்டர்ஸ் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், சக வீரர் பிரக்ஞானந்தா மோதினர். கடைசியாக 2018ல் கோல்கட்டாவில் நடந்த போட்டியில் இருவரும் மோதினர். தவிர ஆனந்த் பயிற்சியில் வளர்ந்த பிரக்ஞானந்தா, தற்போது 6 ஆண்டுக்குப் பின் மீண்டும் அவருடன் மோதியதால் எதிர்பார்ப்பு எகிறியது.
காலிறுதியில் முதல் இரு போட்டியும் ‘டிரா’ ஆக, ஸ்கோர் 1.0-1.0- என சமனில் முடிந்தது. இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘டைபிரேக்கருக்கு’ சென்றது. இதில் ஆனந்த், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினர். துவக்கத்தில் இருந்தே பிரக்ஞானந்தா ஆதிக்கம் செலுத்தினார்.
22வது நகர்த்தலில் ஆனந்த் தவறு செய்தார். இதைச் சரியாக பயன்படுத்திய பிரக்ஞானந்தா, 26 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து 2.0-1.0 என வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதில் பிரக்ஞானந்தா சக வீரர் அர்ஜுன் எரிகைசியுடன் மோதுகிறார். முதல் போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் அர்ஜுன். இப்போட்டியில் பிரக்ஞானந்தா, 70 வது நகர்த்தலில் தோல்வியடைய, 0-1 என பின்தங்கினார்.
+ There are no comments
Add yours