வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற விரும்புகிறோம்- ரோஹித் ஷர்மா

Spread the love

சென்னை: இந்தியா – வங்கதேசம் அணிகள் இடையே 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (19-ம் தேதி) தொடங்குகிறது. இதையொட்டி கடந்த சில நாட்களாக சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியஅணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ரோஹித் சர்மா கூறியதாவது:

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் வரும் அனைத்து போட்டிகளும் முக்கியம். எனவே வங்கதேசம் போட்டியை தொடர்ந்து நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரும் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான ஒத்திகை கிடையாது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல் திறந்த நிலையில் உள்ளது.

எல்லா அணிகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டியது முக்கியம். அடுத்த 2 மாதங்கள் நாங்கள் எங்கு விளையாடுகிறோம் என்பது முக்கியம் இல்லை. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற விரும்புகிறோம். இதில்தான் தற்போது எங்களது கவனம் உள்ளது.

கே.எல்.ராகுல் தரமான வீரர் என்பதை அனைவரும் அறிவோம். நாங்கள் அவருக்கு கூறியுள்ள தகவல் ஒன்று மட்டுமே. அவர், அனைத்து ஆட்டங்களிலும் விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும் அவர், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் விரும்புகிறோம். கே.எல்.ராகுலிடம் இருந்துசிறந்ததை வெளிக் கொண்டுவருவது எங்கள் கடமையாகும். இதை அவருக்கு தெளிவுப்படுத்தி உள்ளோம்.

கே.எல்.ராகுல் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சதம் அடித்தார். தொடர்நது இங்கிலாந்து எதிராக ஹைதராபாத் போட்டியில் 80 ரன்கள் சேர்த்தார். அதன் பின்னர் அவருக்கு காயம் ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, அந்தகாயம் காரணமாக அவர், அதன்பிறகு எந்த ஆட்டத்திலும் விளையாடவில்லை. ஹைதராபாத்தில் அவர், விட்ட இடத்திலிருந்து தொடர்வார் என்று நம்புகிறேன்.

சுழற்பந்து வீச்சுக்கு எதிராகவும், வேகப்பந்து வீச்சுக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடும் திறன் கே.எல்.ராகுலுக்கு உண்டு. எனவே, அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்பதற்கு எந்தகாரணமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதற்கான வாய்ப்புகள் இப்போது வெளிப்படையாக உள்ளன. புதிய பயிற்சியாளர் குழுவினர் வித்தியாசமான பாணியைக் கொண்டுள்ளனர், ஆனால் எந்த பிரச்சினையும் இல்லை. புரிந்து கொள்வதே முக்கியம், கம்பீருடன் எனக்கு அது உள்ளது.

ஒவ்வொரு அணியும் இந்தியாவை வீழ்த்த விரும்புகிறது. அதில் அவர்கள் கொஞ்சம் பெருமை கொள்கிறார்கள். எதிரணி வீரர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நாங்கள் சிந்திப்பதில்லை. போட்டிகளை எப்படி வெல்வது என்பது பற்றி சிந்திப்பதே எங்கள் வேலை. உலகின் அனைத்து முன்னணி அணிகளுக்கு எதிராகவும் இந்தியா கிரிக்கெட் விளையாடியுள்ளது. எனவே, முற்றிலும் மாறுபட்ட களவியூயங்களை உருவாக்க வேண்டிய அவசியமில்லை.

சிறந்த வீரர்கள் அனைத்து ஆட்டங்களிலும் விளையாட வேண்டும் என்று விரும்புகிறீர்கள், ஆனால் அதிக அளவிலான போட்டிகள் இருப்பதால் அது சாத்தியமில்லை. டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமல்ல, டெஸ்ட் தொடரின் நடுவில் டி20 தொடரும் நடைபெறுகிறது. எனவே அதற்கு தகுந்தவாறு பந்து வீச்சாளர்களை நிர்வகிக்க வேண்டும். இதற்கு திட்டம் வகுத்துள்ளோம். இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours