ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டு ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஜீவன்ஜி தீப்தி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
சீனாவில் அக்.22ஆம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் போட்டிகள் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவிலிருந்து 17 விளையாட்டுப் பிரிவுகளில் 303 வீரர் – வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில், இன்று நடைபெற்ற (டி-20 பிரிவு) 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஜீவன்ஜி தீப்தி கலந்துகொண்டார். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 56.69 நொடிகளில் கடந்து தீப்தி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
ஆசிய அளவில் இது சாதனையாகவும் பதிவாகியுள்ளது. மேலும், பெண்களுக்கான (டி-12 பிரிவு) 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சிம்ரன் சர்மா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
+ There are no comments
Add yours