செந்தில் பாலாஜிக்கு வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்!

Spread the love

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிஇரண்டாவது முறையாக ஜாமீன் கோரிய வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிகைது செய்யப்பட்டார்அவர் கடந்த 8 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்இந்த வழக்கில் ஜாமீன்கோரிஇரண்டாவது முறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணைகடந்த 14ம் தேதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைநடைபெற்றதுஅப்போதுஅரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் .ஆர்.எல் சுந்தரேசன்செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும்இன்னும் செல்வாக்குமிக்கராகவேஇருக்கிறார்அவர் ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சிகளை கலைக்கக்கூடும்அதனால்அவருக்கு ஜாமீன்கொடுக்கக்கூடாது” என்று வாதிட்டார்.

இதைத் தொடர்ந்துகடந்த 21ம் தேதி நடந்த வழக்கு விசாரணையில், “செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டுக்குஎந்த ஆதாரமும் இல்லைவழக்கு ஆவணங்களை அமலாக்கத்துறை திருத்தியுள்ளதுநிபந்தனை விதித்தால் அதற்குகட்டுப்பட தயார்” என்று செந்தில்பாலாஜி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதற்கு மறுப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, “ஆவணங்களில் எந்த திருத்தமும் செய்யவில்லைசெந்தில்பாலாஜிசுமார் 2900 பேருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் சேகரித்தற்கான ஆதாரங்கள் உள்ளன” என்றுவாதிட்டதுஇருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில்தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்தார்இந்நிலையில்இந்த ஜாமீன் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளிக்கஉள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours