நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு சென்ற செரியாபாணி பயணிகள் கப்பல் மீண்டும் இலங்கையில் இருந்து நாகை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது

Spread the love

40 ஆண்டுகளுக்கு பிறகு நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்கியது. பிரதமர் நரேந்திரமோடி காணொளி காட்சி மூலமாக கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நாகை துறைமுகத்தில் நடைப்பெற்ற தொடக்க விழா நிகழ்வில் மத்திய கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மற்றும் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, சட்டத்தைறை அமைச்சர் ரகுபதி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் கொடியசைத்து கப்பலை வழி அனுப்பி வைத்தனர். நாகையில் இருந்து 50 பயணிகள் இலங்கைக்கு பயணம் செய்தனர். நாகை துறைமுகத்தில் இருந்து காலை 8;15 மணிக்கு புறப்பட்ட கப்பல் 4 மணி நேரம் பயணித்து 12;15 மணிக்கு காங்கேசன் துறைமுகத்திற்கு சென்றடைந்தது. இலங்கைக்கு சென்ற செரியா பாணி கப்பல் மற்றும் தமிழக பயணிகளை இலங்கை கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறீ பாடலி சில்வா மற்றும் யாழ்பாணம் இந்திய தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் இருந்து நாகைக்கு செரியாபாணி மீண்டும் புறப்பட்டது. அதில் இலங்கை பயணிகள் 30 பேர் பயணம் செய்து நாகை துறைமுகத்திற்கு வந்து சேர்தனர். காங்கேசன்துறையில் இருந்து 1;15 க்குகு புறப்பட்டு 5: க்குமணிக்கு நாகை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. துறைமுகத்திற்கு வருகைதந்த இலங்கை பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் விசா, பாஸ்போர்ட் மற்றும் அவர்கள் எடுத்துவந்த சூட்கேஸ் உள்ளிட்ட பொருட்களை தீவிர சோதனை செய்த பிறகே அனுத்தனர். இலங்கையில் இருந்து வந்த பயணிகள் கப்பலில் பயணித்து நாகை வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்து வருகின்றனர். இந்த கப்பல் சேவை தமிழகம் மற்றும் இலங்கை நல்லுறவை வளர்ப்பது மட்டுமின்றி வர்த்தகம் வளர்வதற்கும் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது என்பதே நாகை மக்களின் எண்ணமாக இருக்கிறது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours