உழைப்பிற்கு அடையாளமாக பெயர் பெற்ற சென்னையின் வரலாற்றை பேணி காப்போம் – எடப்பாடி பழனிசாமி

Spread the love

தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகருக்கு இன்று 384 ஆவது பிறந்தநாள் . வெள்ளையர்களின் கிழக்கு இந்திய கம்பெனி தங்களது வியாபார தந்திரத்தால் , தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த இந்த ஆகஸ்ட் 22 ஆம் நாள் சென்னை தினமாக ஒவ்வரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது .

இந்நிலையில் சென்னையின் 384-வது பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இ.பி.எஸ் வெளியிட்டுள்ள செய்துகுறிப்பில் கூறிருப்பதாவது :

சாதி மத பேதமின்றி வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரமாக மட்டுமின்றி கலை நகரமாகவும் கலாச்சார நகரமாகவும் விளங்கும் சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று!

கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 384.

உழைப்பிற்கு அடையாளமாக பெயர் பெற்ற சென்னையின் வரலாற்றை பேணி காப்போம்! சென்னையின் பெருமையை போற்றுவோம்! அனைவருக்கும் மெட்ராஸ் தின வாழ்த்துகள்

இது நம்ம சென்னை! என இ.பி.எஸ் வெளியிட்டுள்ள செய்துகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours