குழந்தை பாலினத்தை வீடியோ வெளியிட்டு அறிவித்த பிரபல யூடியூபர் இர்பான் மீது தமிழக அரசின் சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பவும், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளது.
‘இர்பான் வியூவ்’ யூடியூபர் இர்பான் சமீபத்தில் தனது மனைவியுடன் துபாய் சென்று தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் தொடர்பான வீடியோவை வெளியிட்டார்.
தமிழகத்தில் பாலினத்தை முன்கூட்டியே கண்டறிவது 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றமாகும்.
இந்நிலையில் துபாயில் குழந்தையின் பாலினம் கண்டறியும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டிருந்தாலும் அதனை யூடியூபில் வெளியிட்டது குற்றமாகும் என கூறி தமிழக சுகாதாரத் துறை சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இர்பான் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க காவல் துறையிலும் புகார் அளிக்க தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
+ There are no comments
Add yours