இன்று கூடுகிறது தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்!

Spread the love

தனது பிரியத்திற்குரிய தொண்டர்களை சந்திக்க பரபரவென கிளம்பி வருகிறார் நடிகர் விஜயகாந்த். இன்று காலை8.45 மணிக்கு சென்னை திருவேற்காட்டில், நடிகர் விஜயகாந்த் தலைமையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. நீண்ட நாட்கள் கழித்து தங்கள் தலைவரை நேரில் காணும் உற்சாகத்தில் தேமுதிக தொண்டர்கள் உள்ளனர்.

”தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று, டிசம்பர் 14ம் தேதி வியாழக்கிழமை காலை 8.45 மணியளவில், சென்னை, திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதாக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச்செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். மேலும் கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து உரை ஆற்றவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், தேர்தல் பணி குழு செயலாளர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டில்லி, அந்தமான் ஆகிய மாநில கழக செயலாளர்களும் இப்பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், தொண்ட்ர்கள் கவலையில் ஆழ்ந்தனர். தற்போது விஜயகாந்த் பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வது தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இணைவதா, அல்லது தனித்து போட்டியிடுவதா என்ற நிலைப்பாட்டை எடுக்க இந்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட நாட்கள் கழித்து தங்கள் தலைவரைக் காணும் ஆர்வத்தில் இன்று அதிகாலையிலேயே தொண்டர்கள் திருவேற்காடு ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் குவிய துவங்கினார்கள். நடிகர் விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேசுவார் என்றும், பிரேமலதா கட்சியின் செயல் தலைவராக அறிவிக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours