குட்டையில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பலி!

Spread the love

ஆவடியில் மீன் பிடிக்கும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் நேற்று ஆந்திர மாநிலம் நெல்லூர் – காவாலி இடையே கரையை கடந்தது. புயல் காரணமாக கடந்த 3ம் தேதி மாலை முதல் 4ம் தேதி நள்ளிரவு வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், சென்னை மாநகர் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. இந்த மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், சில இடங்களில் வெள்ள நீரில் இளைஞர்கள், சிறுவர்கள் ஆபத்தை அறியாமல் விளையாட்டிலும் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் தண்ணீரில் வந்த மீன்களையும் பிடித்து கொண்டு சென்றனர்.

இதனிடையே, ஆவடியில் குட்டையில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பலியானார். ஆவடி வீராபுரத்தை சேர்ந்த பிரவின் என்ற இளைஞர் பங்காருபேட்டையில் உள்ள குட்டையில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது, தூண்டிலை போடும், தலைக்கு மேல் இருந்த மின்சார ஒயரில் பட்டு மின்சாரம் பாய்ந்துள்ளது. அதில் மயங்கி விழுந்த அவரை அருகே இருந்தவர்கள் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே பிரவின் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, வெள்ளத்தில் மீன் பிடிப்போருக்கும் வேடிக்கை பார்ப்போருக்கும் அதிகாரிகள் கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours